/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாராந்திர குறைகேட்பு: மனு கொடுக்க குவிந்த மக்கள் வாராந்திர குறைகேட்பு: மனு கொடுக்க குவிந்த மக்கள்
வாராந்திர குறைகேட்பு: மனு கொடுக்க குவிந்த மக்கள்
வாராந்திர குறைகேட்பு: மனு கொடுக்க குவிந்த மக்கள்
வாராந்திர குறைகேட்பு: மனு கொடுக்க குவிந்த மக்கள்
ADDED : ஜூலை 02, 2024 05:37 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுக்க குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இதில், முதியோர் உதவித்தொகை,இலவச வீட்டுமனை பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மனுக்கள் குவிந்தது.
முன்னதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களை, நுழைவு வாயிலில்போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
நேற்று நடந்த கூட்டத்தில், பொதுமக்கள்கூட்டம் அதிகரித்து நீண்ட வரிசையிலும், தரையில் அமர்ந்து காத்திருந்து மனுகொடுத்தனர். இதனால், கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.