/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் மறியல் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் மறியல் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் மறியல் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் மறியல் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் மறியல் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 12, 2024 01:54 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் விருத்தாசலம் - ஸ்ரீமுஷ்ணம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
பெண்ணாடம் அடுத்த ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சி, சின்னாத்துக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போர்வெல் மோட்டார் பழுதானதால் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அருகிலுள்ள விளைநிலங்களில் உள்ள பாசன மோட்டாரில் தண்ணீர் எடுத்து அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தி வந்தனர்.
மோட்டார் சீரமைக்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7:30 மணியளவில் விருத்தாசலம் - ஸ்ரீமுஷ்ணம் சாலையில் சின்னாத்துக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்து சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதையேற்று, காலை 8:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் விருத்தாசலம் - ஸ்ரீமுஷ்ணம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.