மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில் ரயில் மோதி வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி ரயில்வே தண்டாவளம் பகுதியில் நேற்று அதிகாலை 5:30 மணியளவில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். ரயிலில் அடிப்பட்ட இறந்தவர் பெரியாக்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன், 40 என்பதும், இயற்கை உபாதைக்காக ரயில் பாதையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற ரயில் மோதி இறந்ததும் தெரிய வந்தது.
விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.