ADDED : ஜூன் 04, 2024 11:57 PM
கடலுார்: கோடை மழையால் வரத்து குறைந்துள்ளதால், கடலுாரில் காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடலுாரில் கடந்த வாரம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கொத்தமல்லி. 110 ரூபாய் உயர்ந்து நேற்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் 80 ரூபாய்க்கு விற்பனையான பச்சை மிளகாய் 120 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 44, சின்ன வெங்காயம் 70, கத்தரி 40, வெண்டை 40, முருங்கைக்காய் 60, தக்காளி 35, பீர்க்கங்காய் 80 மற்றும் பஜ்ஜி மிளகாய் தலா 100, குடைமிளகாய் 80, இஞ்சி 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோடை மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால், கடலுார் மாவட்டத்தில் காய்கறி தொடர்ந்து விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.