/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வி.சி., ரயில் மறியல்: எக்ஸ்பிரஸ் தாமதம் வி.சி., ரயில் மறியல்: எக்ஸ்பிரஸ் தாமதம்
வி.சி., ரயில் மறியல்: எக்ஸ்பிரஸ் தாமதம்
வி.சி., ரயில் மறியல்: எக்ஸ்பிரஸ் தாமதம்
வி.சி., ரயில் மறியல்: எக்ஸ்பிரஸ் தாமதம்
ADDED : மார் 12, 2025 12:51 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வி.சி., கட்சி ரயில் மறியல் போராட்டத்தால், எக்ஸ்பிரஸ் ரயில் 7 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.
திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை 4:10 மணிக்கு வந்தது. அப்போது. ஆங்காங்கே மறைந்திருந்த வி.சி., கட்சியினர் திடீரென ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழர்களை இழிவுபடுத்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். அவர்களை ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, 7 நிமிடங்கள் தாமதமாக, 4:20 மணிக்கு, ஹவுரா எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து, அக்கட்சி மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் உட்பட 20 பேரை ரயில்வே போலீசார் கைது செய்து, ரயில்வே திருமண மண்டபத்தில் அடைத்தனர்.