/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரம் தொகுதியில் வி.சி., கட்சி திருமாவளவன் வெற்றி சிதம்பரம் தொகுதியில் வி.சி., கட்சி திருமாவளவன் வெற்றி
சிதம்பரம் தொகுதியில் வி.சி., கட்சி திருமாவளவன் வெற்றி
சிதம்பரம் தொகுதியில் வி.சி., கட்சி திருமாவளவன் வெற்றி
சிதம்பரம் தொகுதியில் வி.சி., கட்சி திருமாவளவன் வெற்றி
ADDED : ஜூன் 05, 2024 03:26 AM
சிதம்பரம்: சிதம்பரம் லோக்சபா தொகுதியில் வி.சி., கட்சி வேட்பாளர் திருமாவளவன், 1,03,554 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சி வேட்பாளர் திருமாவளவன், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன், பா.ஜ., வேட்பாளர் கார்த்திகாயினி,. நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சிராணி உள்ளிட்ட 14 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் 11, 67,071 ஓட்டுகள் பதிவாகியது.
நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில்அதில், வி.சி., கட்சி வேட்பாளர் திருமாவளவன் 5,05,084 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவர், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனை விட 1,03,554 ஓட்டுகள் கூடுதலாக பெற்றார்.
அ.தி.மு.க, சந்திரகாசன் 4,01,530 ஓட்டுகளும், பா.ஜ.,கார்த்திகாயினி 1,68,493 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி ஜான்சிராணி 65,589 ஓட்டுகளும் பெற்றனர்.
மேலும், நீலமேகம் (பி.எஸ்.பி.,) 3203, தமோதரன் (எம்.என்.கே.) 1,642, சுயேச்சைகள் அர்ச்சுனன் 1,836, இளவரசன் 586, சின்னதுரை 638, தமிழ்வேந்தன் 3,062, பெருமாள் 2,239, ராதா 1,280, ராஜமாணிக்கம் 1,087, வெற்றிவேல் 2,041 ஓட்டுகளும் பெற்றனர். நோட்டாவிற்கு 8,761 ஓட்டுகள் கிடைத்தது.