/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பயனற்ற மினி டேங்க்; ரூ.3.30 லட்சம் நிதி வீண் பயனற்ற மினி டேங்க்; ரூ.3.30 லட்சம் நிதி வீண்
பயனற்ற மினி டேங்க்; ரூ.3.30 லட்சம் நிதி வீண்
பயனற்ற மினி டேங்க்; ரூ.3.30 லட்சம் நிதி வீண்
பயனற்ற மினி டேங்க்; ரூ.3.30 லட்சம் நிதி வீண்
ADDED : ஜூன் 10, 2024 01:20 AM

பெண்ணாடம் : பெ.கொல்லத்தங்குறிச்சியில் காட்சிப்பொருளான மினிடேங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை ஊராட்சி, பெ.கொல்லத்தங்குறிச்சி கிராமத்தில், மினிடேங்க் மற்றும் கைப்பம்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் போர்வெல்லுடன் கூடிய மினி டேங்க் அமைக்கப்பட்டது.
ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்காமல் காட்சிப்பொருளாக உள்ளதால் குடிநீர் பெற கிராம மக்கள் சிரமம் அடைவது தொடர்கிறது. மினி டேங்க் பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, பெ.கொல்லத்தங்குறிச்சியில் காட்சிப்பொருளாக உள்ள மினிடேங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.