ADDED : ஜூன் 10, 2024 01:20 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருவங்கூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா, 62.
இவர், கடந்த 8ம் தேதி விருத்தாசலம் செல்வராஜ் நகரில் உள்ள உறவினரை பார்க்க பைக்கில் வந்தார். விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் விஜயமாநகரம் என்ற இடத்தில் வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த ராஜா, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், அங்கு நேற்று இறந்தார்.
மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.