/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட அரசுக்கு வலியுறுத்தல் டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட அரசுக்கு வலியுறுத்தல்
டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட அரசுக்கு வலியுறுத்தல்
டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட அரசுக்கு வலியுறுத்தல்
டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : ஜூன் 23, 2024 05:31 AM
நெல்லிக்குப்பம்: டாஸ்மாக் மதுபான கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமென, அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீரங்கன்பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இல்லாமல் ஒழித்து விடுவோம் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியது. ஆனால், ஒரு டாஸ்மாக் கடையை கூட மூடவில்லை. கள்ளக்குறிச்சியில் ஆளுங்கட்சியினர் மற்றும் போலீசார் துணையோடு விற்பனையான கள்ளசாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கள்ளசாராயத்தை தடுக்க தவறிய போலீஸ் அதிகாரிகளை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடி மது இல்லாத மாநிலமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.