ADDED : ஜூன் 23, 2024 05:31 AM
சேத்தியாத்தோப்பு: கள்ளக்குறிச்சி விஷ சாரய சாவு சம்பவத்தையொட்டி சேத்தியாத்தோப்பு சரகத்தில் மதுபாட்டில் பதுக்கி விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
டி.எஸ்.பி.,யின் தனிப்பிரிவு போலீசார் நேற்று வடக்குமெயின்ரோட்டில் டாஸ்மாக் அருகே உள்ள பாரில் சோதனை நடத்தினர்.
அங்கு, 20க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த சேகர் 61; என்பவரை கைது செய்து, அவர் மீது சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.