/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 03, 2024 03:48 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும்பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டார கல்வி அலுவலர்கள் உமாராணி, கந்தசாமி, மேற்பார்வையாளர் காயத்ரி துவக்கி வைத்தனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன உதவி பேராசிரியர் நடராஜன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பழனி ஆகியோர் பார்வையிட்டு எண்ணும், எழுத்தும் திட்டத்தின் நோக்கம் குறித்து ஆலோசனை வழங்கினர்.
ஆசிரிய பயிற்றுநர்கள் ஷீலா, சசிக்குமார், சங்கீதா, சவுந்தரவள்ளி, ராஜலட்சுமி, கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வசந்தி, ஆசிரியர் பயிற்றுநர்மணிகண்ணன ஏற்பாடுகளை செய்திருந்தனர்.