/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோஸ்டல் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு கோஸ்டல் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
கோஸ்டல் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
கோஸ்டல் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
கோஸ்டல் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 03, 2024 03:09 AM

கடலுார் : கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது.
முன்னாள் தலைவர் கருணாகரன் வரவேற்றார். புதிய தலைவராக ேஹமலதா ைஹடெக் நிறுவன சேர்மன் செந்தில்பாரதி, செயலாளராக சிவகுருநாதன், பொருளாளராக விஜய் ஆனந்த் பதவியேற்றனர்.
தலைமை விருந்தினரான தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடு தொடர்பான ட்ரில்லியன் மில்லியன் கனவு திட்ட ஆலோசகர் சுரேஷ் சம்பந்தம், சிறப்பு விருந்தினர் முன்னாள் ஆளுனர் பிறையோன் கருத்துரை ஆற்றினர்.
முன்னாள் உதவி ஆளுனர் பூங்குன்றன் வாழ்த்தி பேசினார். உதவி ஆளுனர் வெங்கடேசன், புதிய உறுப்பினர் சுந்தரேசனை சங்கத்தில் இணைத்தார்.
விழாவில், பாரத் பில்டர்ஸ் சுரேஷ்பாபு, எலைட் கன்ஸ்ட்ரக்ஷன் சந்தானகிருஷ்ணன், முன்னாள் உதவி ஆளுனர் மீனா டிரேடர்ஸ் அசோக், ஏ.ஆர்.சி.அசோசியேட்ஸ் அருண், சூர்யா பில்டர்ஸ் வெங்கடாஜலம், விஜயசங்கர், இளம் தொழில் முனைவோர் சங்க தலைவர் சிவா, பவானி மசாலா ஜெய்சங்கர், பங்கஜம் பிளானர்ஸ் ஆறுமுகம், ஆவண எழுத்தர் விஷ்ணுராம், இன்ஜினியர்கள் ரமேஷ், வரதராஜன், துரை ஓட்டல் ரவி உட்பட அனைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விழாவில், விவசாயத்திற்கான ட்ரோன் கருவியை இயக்குவது குறித்து மாணவர்களுக்கு இலவச பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது. பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.