ADDED : ஜூன் 14, 2024 06:27 AM

திட்டக்குடி: மங்களூர் வட்டாரம், கல்லுார் கிராமத்தில் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் அட்மா திட்டத்தில் கிராம அளவிலான முன்னேற்றக்குழு பயிற்சி நடந்தது.
மங்களூர் வட்டார வேளாண் உதவிஇயக்குனர்(பொ) கீர்த்தனா தலைமை தாங்கினார். மங்களூர் ஒன்றியசேர்மன் சுகுணாசங்கர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் கணேஷ்பாலன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ஆனந்த், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செல்லமுத்து, முத்துசாமி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கல்லுார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். தொடர்ந்து வேளாண்அலுவலர்கள் மண் மாதிரி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.