Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புவனகிரியில் நாளை கடன் மேளா

புவனகிரியில் நாளை கடன் மேளா

புவனகிரியில் நாளை கடன் மேளா

புவனகிரியில் நாளை கடன் மேளா

ADDED : ஜூன் 14, 2024 06:27 AM


Google News
புவனகிரி: புவனகிரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெறும் கடன் மேளாவில் பங்கேற்று பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புவனகிரி கிளை மேலாளர் சஞ்சீவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நாளை (15 ம் தேதி) காலை 10.00 மணிக்கு சிதம்பரம் வடக்கு வீதி ஆத்தி நாட்டார் திருமண மண்டபத்தில் சிறப்பு லோன் மேளா நடக்கிறது.

இம்முகாமில் பொதுமக்கள் நேரில் பங்கேற்று கடன் பெற்று பயன்பெறலாம். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு உடனடியாக வங்கி கணக்கு துவங்கி கடன் வழங்கப்படும். எனவே, சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள், தொழில் முனைவோர், ஆதரவற்ற கைம்பெண், குழு, தனி நபர், ஊதியம் பெறும் மகளிர், டான் செட் கோ, தாட்கோ, கல்வி மற்றும் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்பின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us