/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாரி பழுதாகி நின்றதால் விருதையில் 'டிராபிக் ஜாம்' லாரி பழுதாகி நின்றதால் விருதையில் 'டிராபிக் ஜாம்'
லாரி பழுதாகி நின்றதால் விருதையில் 'டிராபிக் ஜாம்'
லாரி பழுதாகி நின்றதால் விருதையில் 'டிராபிக் ஜாம்'
லாரி பழுதாகி நின்றதால் விருதையில் 'டிராபிக் ஜாம்'
ADDED : ஜூன் 09, 2024 04:01 AM

விருத்தாசலம் : விருத்தாலத்தில் நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி கடை வீதியில் பழுதாகி நின்றதால், போக்குவரத்து பாதித்தது.
விருத்தாசலம் கடைவீதி வழியாக ஜெயங்கோண்டம், அரியலுார், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பஸ், லாரி, வேன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இந்நிலையில், கடைவீதி நான்கு முனை சந்திப்பு வழியாக நேற்று பகல் 1:30 மணியளவில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது.
அப்போது, மணிமுக்தா ஆற்று பாலத்தை கடக்க முயன்ற லாரி, இன்ஜின் பழுதாகி நின்றது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, விருத்தாசலம் போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்பின், லாரி மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, லாரி சரிசெய்யப்பட்டது. இதனால், அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.