/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் மாநகராட்சியில் வியாபாரிகள் முற்றுகை கடலுார் மாநகராட்சியில் வியாபாரிகள் முற்றுகை
கடலுார் மாநகராட்சியில் வியாபாரிகள் முற்றுகை
கடலுார் மாநகராட்சியில் வியாபாரிகள் முற்றுகை
கடலுார் மாநகராட்சியில் வியாபாரிகள் முற்றுகை
ADDED : ஜூலை 11, 2024 05:40 AM

கடலுார் : கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில், அனைத்து பொதுநல இயக்கங்களின்கூட்டமைப்பு மற்றும் சிறு வியாபாரிகள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி முற்றுகை போராட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். செயல் ஒருங்கிணைப்பாளர்திருவரசு, இணை ஒருங்கிணைப்பாளர்கள் தர்மராஜ், கஜேந்திரன், சையது முஸ்தபாமுன்னிலை வகித்தனர்.
இதில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில்மாநகராட்சி அதிகாரிகள் அகற்றிய கடைகளை, புதியதாக கட்ட எவ்வித நடவடிக்கைஎடுக்காததை கண்டித்து சிறு வியாபாரிகள் மற்றும் பொதுநல இயக்கங்களின்கூட்டமைப்பினர் கோஷம் எழுப்பினர்.
அப்போது, வெண்புறா பொது நல பேரவை தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள்ராமலிங்கம், பரிதிவாணன், கஜேந்திரன், சிவாஜி, பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் சுகுமார் நன்றி கூறினார்.