டிராக்டர் டயர் ஏறி கிளீனர் படுகாயம்
டிராக்டர் டயர் ஏறி கிளீனர் படுகாயம்
டிராக்டர் டயர் ஏறி கிளீனர் படுகாயம்
ADDED : ஜூன் 13, 2024 06:00 AM
கடலுார் : கடலுார் பஸ் நிலையம் அருகே குடிநீர் டிராக்டர் டயர் ஏறி கிளீனர் படுகாயமடைந்தார்.
கடலுார் அடுத்த வடுகபாளையத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன், 52. குடிநீர் ஏற்றி செல்லும் டிராக்டர் டிரைவர். இவருடன், நத்தவெளியை சேர்ந்த ராஜி, 56; கிளீனராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் நேற்று கடலுார் மஞ்சக்குப்பத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர டிராக்டரில் கேப்பர் மலைக்கு புறப்பட்டனர். கடலுார் பஸ் நிலையம் அருகே சென்றபோது ராஜி, நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, ராஜியின் இடது காலில் டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. அதில் படுகாயமடைந்த ராஜியை அருகிலிருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்
திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.