/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
ADDED : ஜூலை 06, 2024 04:21 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அதனையொட்டி காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:30 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடாகி உற்சவர் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.
தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தை முன்னிட்டு மகாபிரசாதமாக பலவகை மூலிகைகள் கொண்டு தயாரித்த அவுஷதம் லேகியம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.