/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெய்வேலி கோவிலில் ரகளை போதை ஆசாமிகள் மூவர் கைது நெய்வேலி கோவிலில் ரகளை போதை ஆசாமிகள் மூவர் கைது
நெய்வேலி கோவிலில் ரகளை போதை ஆசாமிகள் மூவர் கைது
நெய்வேலி கோவிலில் ரகளை போதை ஆசாமிகள் மூவர் கைது
நெய்வேலி கோவிலில் ரகளை போதை ஆசாமிகள் மூவர் கைது
ADDED : ஜூன் 11, 2024 06:27 AM
நெய்வேலி: நெய்வேலி வேலுடை யான்பட்டு முருகன் கோவில் வளாகத்தில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி வேலுடை யான்பட்டு முருகன் கோவில் உள்ளது. நேற்று இக்கோவில் வளாகத்தில் நெய்வேலி அடுத்துள்ள வடக்கு மேலுாரை சேர்ந்த சக்கரபாணி மகன் பாடலீஸ்வரன், 23, கோபால் மகன் லட்டு (எ) அருண், 22, சேகர் மகன் ஆனந்தவேல், 23; ஆகிய மூவரும் மது அருந்திவிட்டு, கோயில் வாசல் முன்பு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
போதை ஆசாமிகளிடம், ஏன் இப்படி குடித்து விட்டு அட்டகாசம் செய்கிறீர்கள் கேட்ட பூசாரியை, மூன்று நபர்களும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து கோவில் பூசாரி வினோத்குமார் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ் பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, போதை ஆசாமி கள் மூவரையும் கைது செய்தனர்.