/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திரவுபதியம்மன் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம் திரவுபதியம்மன் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
திரவுபதியம்மன் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
திரவுபதியம்மன் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
திரவுபதியம்மன் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜூன் 25, 2024 04:53 AM
கடலுார் : பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில் நாளை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
கடலுார், பழையவண்டிப்பாளையம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 11ம் தேதி துவங்கியது.
தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மாலை மகா பாரத கதா காலேட்சபம் நடந்து வருகிறது. இன்று மாலை பக்கா சூரனுக்கு சோறு போடுதல் உற்சவம் நடக்கிறது.
நாளை (26ம் தேதி) மாலை அர்ச்சுனன் வில் வளைத்தலை தொடர்ந்து திரவுபதி அம்மன்-அர்ச்சுனன் திருக்கல்யாணம், இரவு மணக்கோலத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
27ம் தேதி தீமிதி திருவிழாவையொட்டி காலை மாடு விரட்டல், அரவான் சிரசு ஊர்வலம் அரவான் களபலி நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு வேண்டுதல் கொண்ட பக்தர்கள், சக்தி கரகத்துடன் வீதியுலா வந்து அக்னி குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.
28ம் தேதி, காலை 108 பால்குட ஊர்வலம், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலை தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீராட்டு நடக்கிறது.