Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஒரு இடத்திற்கு இரு தரப்பினர் உரிமை கோரியதால் பரபரப்பு

ஒரு இடத்திற்கு இரு தரப்பினர் உரிமை கோரியதால் பரபரப்பு

ஒரு இடத்திற்கு இரு தரப்பினர் உரிமை கோரியதால் பரபரப்பு

ஒரு இடத்திற்கு இரு தரப்பினர் உரிமை கோரியதால் பரபரப்பு

ADDED : ஜூன் 25, 2024 07:22 AM


Google News
விருத்தாசலம், : ஒரே இடத்திற்கு உரிமை கோரி இருதரப்பினர் குவிந்ததால், விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட வயலுார் பகுதியில் உள்ள 90 சென்ட் நிலத்தை விற்பனை செய்ய, அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் தரப்பினர், நேற்று காலை 9:30 மணியளவில், விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

தகவலறிந்த வழக்கறிஞர் மதுசூதனன் தலைமை யிலான மற்றொரு தரப்பினர், தங்களுக்கும் அந்த இடத்தில் உரிமை உள்ளது என்பதால் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தனர்.

இதனால் இருதரப்பினருக்குள் வாக்குவாதம் உருவாகி, மோதல் ஏற்படும் அபாயம் நிலவியது. தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சமாதானம் செய்தனர்.

அதில், சம்பந்தப்பட்ட இடத்தை விற்பனை செய்வதற்கு சென்னை ஐகோர்ட்டில் அனுமதி பெற்று வந்துள்ளோம். 90 சென்ட் நிலத்தில் ஏற்கனவே 22 சென்ட் நிலம் விற்பனை செய்யப்பட்டு விட்டது. பூர்வீக சொத்துக்கு சொந்தமான வாரிசுகள் நாங்கள் தான் என அய்யப்பன் தரப்பு தெரிவித்தனர்.

அதே சமயத்தில், மற்றொரு தரப்பில், அந்த இடத்தை மோசடியாக விற்க முயற்சி நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 21 பேர் இணைந்து சார் பதிவாளரிடம் அளித்துள்ளோம் என்றனர்.

மாலை 6:00 மணி வரை இருதரப்பினரும் நின்றிருந்த நிலையில், சார் பதிவாளர் தரப்பிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.

இது தொடர்பாக சார் பதிவாளர் சபுரா பேகத்திடம் கேட்டபோது, 'நாளை (இன்று) முடிவு தெரியும்' எனக்கூறி, அலுவலகத்தை விட்டு கிளம்பிச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, இரவு 7:00 மணியளவில், இருதரப்பினரும் கலைந்து சென்றனர். ஒரே இடத்திற்கு இரு தரப்பினர் உரிமை கோரி ஆதரவாளர்களுடன் குவிந்ததால், விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us