/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆன்மீக அறக்கட்டளை கலெக்டர் அலுவலகத்தில் மனு ஆன்மீக அறக்கட்டளை கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஆன்மீக அறக்கட்டளை கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஆன்மீக அறக்கட்டளை கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஆன்மீக அறக்கட்டளை கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : ஜூன் 25, 2024 07:22 AM

கடலுார், பள்ளி மாணவர்கள் நீதிபதி சந்துரு அறிக்கையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பண்ருட்டி ஹிந்து சமுதாய ஆன்மீக அறக்கட்டளை சார்பில் கொடுத்துள்ள மனு;
நீதிபதி சந்துருவின் அறிக்கை பள்ளி மாணவர்களின் சமத்துவத்தை பற்றி அளித்ததில், பள்ளி மாணவர்கள் மதச்சின்னம் அணிவது, கைகளில் கயிறு கட்டிக் கொள்வது போன்ற செயல்களை அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளது.
இது, ஒரு தலைபட்சமான, மத நம்பிக்கைக்கு எதிரானது மற்றும் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானதாக கருதப்படும். இந்த அறிக்கை கண்டிக்கத் தக்கது.
சிறுவயதில் மத நம்பிக்கை, மத சின்னமிடுதல் நல்ல பழக்கம், இறை நம்பிக்கை போன்றவை இருந்தால் மட்டுமே வயது முதிர்ந்த காலம் வரை அந்த நம்பிக்கை தொடரும்.
ஒரு இந்து கலாசாரம் மிகுந்த நாட்டில் மத நம்பிக்கை, மத சின்னமிடுதல் மிக அவசியம்.
நெற்றியில் மத சின்னம் இடுவதால் உடல் ஆரோக்கியம் பெறும் என, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மாணவர்களின் ஒழுக்கம் என்றால் ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும். காவல்துறையில் உளவுபிரிவு உள்ளது போல் ஆசிரியர் துறையில் உளவு பிரிவு அமைத்து முரணபாடுகளை களைய வேண்டும்.
மாணவர்கள் முடிதிருத்தம் செய்வதில் அழகு என்ற பெயரில் ஒழுங்கற்ற முறையில் முடி திருத்தம் செய்து வருகின்றனர். அவைகளை ஆசிரியர்கள் கண்டிக்க ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும். எதிர்கால மாணவர்களின் நலன் கருதி இக்கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.