ADDED : ஜூன் 29, 2024 05:53 AM
கடலுார் : மயங்கி விழுந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலுார் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 63; இவர், கடந்த 26ம் தேதி வீட்டில் மயக்கமடைந்து திடீரென கீழே விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
இது குறித்த புகாரின்பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.