Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'மக்களுடன் முதல்வர் -ஊரகம் ” சிறப்புத் திட்டம் 18ம் தேதி வரை முகாம்கள் ஏற்பாடு

'மக்களுடன் முதல்வர் -ஊரகம் ” சிறப்புத் திட்டம் 18ம் தேதி வரை முகாம்கள் ஏற்பாடு

'மக்களுடன் முதல்வர் -ஊரகம் ” சிறப்புத் திட்டம் 18ம் தேதி வரை முகாம்கள் ஏற்பாடு

'மக்களுடன் முதல்வர் -ஊரகம் ” சிறப்புத் திட்டம் 18ம் தேதி வரை முகாம்கள் ஏற்பாடு

ADDED : ஜூலை 15, 2024 02:30 AM


Google News
கடலுார்: 'மக்களுடன் முதல்வர்-ஊரகம்” என்ற சிறப்புத் திட்டத்தில் மேலும் பல கிராமங்கள் இன்று முதல் 18ம் தேதி வரை நடக்கிறது.

கடலுார் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சிகளில் உள்ள 683 கிராமப் பகுதி

மக்கள் பயன்பெறும் வகையில் ”மக்களுடன் முதல்வர்-ஊரகம்” சிறப்புத் திட்டத்தின்கீழ் 11 ம் தேதி முதல் 13ம் தேதி வரை மொத்தம் 91 முகாம்கள் நடந்தது.

இத்திட்டத்தின் கீழ் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை வரும் வாரத்தில் 9 முகாம்கள் நடக்கவுள்ளது. 15ம் தேதி கடலுார் அன்னவல்லி, ராமாபுரம் முத்தாலம்மன் திருமண மண்டபத்திலும், காட்டுமன்னார்கோவில் நாட்டார்மங்கலம், கொண்டசமுத்திரம், மாமங்கலம் வானமாதேவி, அகரபுத்துார், அறந்தாங்கி, சித்தமல்லி, கருணாகரநல்லுார், குருங்குடி ஆகிய பகுதிகளுக்கு நாட்டார்மங்கலம் ராஜீவ்காந்தி உயர்நிலைப்பள்ளியிலும்,

மங்களுர், மலையனுார், ஆலம்பாடி, ஆவட்டி, கல்லுார் ஆகிய கிராமங்கள் மங்களூர், மா.புத்தூர், ஒரங்கூர், மா.கொத்தனுார் ஆகிய கிராமங்கள் ஜி.வி. திருமண மண்டபத்திலும் நடக்கிறது.

16ம் தேதி அவியனுார் , ஏ.பி.குப்பம், எனதிரிமங்கலம், காவனுார், பைத்தம்பாடி, ஒறையூர், கரும்பூர், பண்டரக்கோட்டை ஆகிய பகுதிகள் ஒறையூர் அரசு மேல்நிலை பள்ளியிலும், மணிக்கொல்லை, வில்லியநல்லுார். பெரியபட்டு, சிலம்பிமங்கலம் ஆகிய பகுதிகள் புதுச்சத்திரம் ஒம் சக்தி திருமண மண்டபத்திலும், 18ம் தேதி எல்.என்.புரம், பூங்குணம், கொளப்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய ஊர்களுக்கு பூங்குணம் அரசு உயர்நிலை பள்ளியிலும் நடக்கிறது.

ஆயிப்பேட்டை, சி.மேலவன்னியூர், சி,வீரசோழங்கன், எடையான்பால்சேரி, வடஹரிராஜபுரம், வயலுார், சாக்கான்குடி, தென்ஹரிராஜபுரம், எண்ணகரம், கீரப்பாளையம், கன்னங்குடி, கீழ்நத்தம் ஆகிய பகுதிகள் கீரப்பாளையம்ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் நடக்கிறது.

அதேப்போல நல்லுார் பகுதிகள் கீழக்குறிச்சி அரசு உயர் நிலைப் பள்ளியிலும், கம்மாபுரம் பகுதிகள் என்.பி.எஸ்.திருமண மகாலிலும் நடக்கிறது.

இதில் அனைத்து வகையான சான்றிதழ்களும், அரசு வழங்கும் உதவித்தொகைகள் மற்றும் பணிகள் குறித்து தீர்வு காண பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us