ADDED : ஜூலை 15, 2024 02:30 AM

கடலுார்: கடலுார், முதுநகர் சாலக்கரையில் (மார்க்கெட் கமிட்டி பின்புறம்) டெல்லி பப்ளிக் பள்ளி திறப்பு விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் சத்தியலட்சுமி பிரித் தலைமை தாங்கினார். டாக்டர் குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் இந்திய அணுசக்தி துறை முன்னாள் இயக்குனர் ஆச்சார்யா புதிய பள்ளியை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.
காமாட்சி சண்முகம் பேசினார். விழாவில், வெஸ்லி நர்சரி பிரைமரி பள்ளி ஞானசம்பந்தம், கிருபாகரன், சோபன்பாபு, தமிழ்மாறன், வக்கீல் பாலசந்தர், நீலமேகம், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் பங்கேற்றனர்.
ஆசிரியை ஜெயமதி நன்றி கூறினார்.
இதுகுறித்து பள்ளி நிறுவனர் சத்தியலட்மி பிரித் கூறுகையில், 'உலகத்தரம் வாய்ந்த டெல்லி பப்ளிக் பள்ளியி்ல் பிரி.கே.ஜி.,-எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்பில் 2 வயது முதல், 6 வயது வரை மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்கிறது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறை உள்ளன. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். இலவச பள்ளி வாகனம் உள்ளது' என்றார்.