/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஜல்லி கொட்டி 3 மாதங்களாகியும் சாலைப் பணி துவங்கவில்லை ஜல்லி கொட்டி 3 மாதங்களாகியும் சாலைப் பணி துவங்கவில்லை
ஜல்லி கொட்டி 3 மாதங்களாகியும் சாலைப் பணி துவங்கவில்லை
ஜல்லி கொட்டி 3 மாதங்களாகியும் சாலைப் பணி துவங்கவில்லை
ஜல்லி கொட்டி 3 மாதங்களாகியும் சாலைப் பணி துவங்கவில்லை
ADDED : ஜூன் 24, 2024 04:51 AM

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் சாலை அமைக்க ஜல்லி கொட்டி மூன்று மாதங்களாகியும் பணிகள் நடக்காததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் திருக்குளம் பகுதியில் சாலை அமைக்க 6 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து ஒப்பந்ததாரர் அங்கு மூன்று மாதங்களுக்கு முன் சாலைப் பணிக்காக ஜல்லி மற்றும் எம்.சாண்ட் ஆகியவற்றை கொண்டு வந்து சாலையின் நடுவில் கொட்டினார்.
ஆனால் இதுவரை சாலைப் பணி நடக்கவில்லை. இதனால் அவ்வழியே வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். உடனடியாக சாலை அமைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்கு அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.
ஒப்பந்ததாரர் வீரமோகன் கூறுகையில், 'அரசு நிர்ணயித்த தொகையை விட குறைவான தொகைக்கு போட்டி போட்டு டெண்டர் எடுத்தேன். இதுவரை 15 லட்சம் ரூபாய்க்கு மற்ற இடங்களில் பணியை முடித்து 6 மாதமாகியும் எனக்கு சேர வேண்டிய தொகையை தராமல் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். கடன் வாங்கியே குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடித்தேன். பணம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் திருக்குளம் பகுதியில் ஜல்லி கொட்டினேன். பணம் வராததால் பணி துவங்கவில்லை' என்றார்.
எனவே, பொது மக்கள் நலன் கருதி இப்பிரச்னையில் கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.