Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: மர்ம கும்பல் அட்டூழியம்

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: மர்ம கும்பல் அட்டூழியம்

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: மர்ம கும்பல் அட்டூழியம்

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: மர்ம கும்பல் அட்டூழியம்

ADDED : ஜூன் 19, 2024 01:32 AM


Google News
நெய்வேலி : நெய்வேலியில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை, காரில் வந்த மர்ம குமபல் வழி மறித்து கத்திகை காட்டி மிரட்டி 5 சவரன் தாலி செயினை, பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெய்வேலி அடுத்த மானடிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி ஜெயந்தி, 38; நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 3ல் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஜெயந்தி நேற்று காலை 8.40 மணிக்கு நெய்வேலி வட்டம் 9ல் உள்ள தனியார் பள்ளியில் தனது பிள்ளைகளை விட்டுவிட்டு, வட்டம் 3 பாரதிதாசன் சாலை வழியாக வீட்டிற்கு ஸ்கூட்டியில் சென்றார்.

அப்போது காரில் வந்த மர்ம நபர்கள், ஜெயந்தியை மறித்து கத்தியை காட்டி அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலியை பறித்து சென்றனர்.

இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us