ADDED : ஜூன் 19, 2024 01:32 AM
பாகூர் : சாலை விபத்தில் சமையல் கலைஞர் இறந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்தகுச்சிபாளையத்தை சேர்ந்தவர் பக்கிரி, 55; சமையல் கலைஞர். இவர், கடந்த 16ம் தேதி அரியாங்குப்பத்தில் சமையல் வேலைக்கு சென்றார்.
அங்கு வேலையை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, கீழ் அருங்குணத்தை சேர்ந்த பிரேம்நாத் 38; என்பவருடன் பைக்கில் வீட்டிற்குபுறப் பட்டார்.
புதுச்சேரி - கடலுார் சாலை நோணாங்குப்பம் படகு குழாம் அருகே வந்த போது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதுவது போல் வேகமாக முந்தி சென்றது. அதில் அதிர்ச்சி அடைந்த பிரேம்நாத் பிரேக் பிடித்ததில் நிலையில் தடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர்.
அதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டுபுதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவர்களை பரிசோதித்தடாக்டர், பக்கிரி ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். பிரேம்நாத்திற்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.