மேம்பாலத்தில் தார் சாலை பணி மந்தம்
மேம்பாலத்தில் தார் சாலை பணி மந்தம்
மேம்பாலத்தில் தார் சாலை பணி மந்தம்
ADDED : ஜூன் 01, 2024 06:33 AM

கடலுார் : கடலுார் அண்ணா மேம்பாலத்தில் தார் சாலை அமைக்கும் பணிக்காக போடப்பட்ட கீரல்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.
கடலுார் கெடிலம் ஆறு அண்ணா மேம்பாலம் மூலம் கடலுார் வழியாக, புதுச்சேரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் உள்ள இரும்பு தண்டவாளங்கள் வெளியில் தெரிந்தது. இதனால், மேம்பாலத்தின் மேல் உள்ள சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக, மேம்பாலத்தின் மேல் உள்ள தார் சாலையை இயந்திரங்கள் மூலம் பெயர்த்து எடுத்து கீரல் போடும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. இதையடுத்து, தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண்களை கசக்கி செல்லும் நிலை நீடித்து வருகின்றது. எனவே, மேம்பாலத்தில் தார் சாலை அமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.