/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பைப்லைன் உடைந்தது சாலையில் வழிந்தோடிய குடிநீர் பைப்லைன் உடைந்தது சாலையில் வழிந்தோடிய குடிநீர்
பைப்லைன் உடைந்தது சாலையில் வழிந்தோடிய குடிநீர்
பைப்லைன் உடைந்தது சாலையில் வழிந்தோடிய குடிநீர்
பைப்லைன் உடைந்தது சாலையில் வழிந்தோடிய குடிநீர்
ADDED : ஜூன் 01, 2024 06:38 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வழிந்தோடியதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் நகராட்சி 3வது வார்டு, மாணிக்கவாசகர் நகரில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி நடந்தது. அப்போது, சரிவர பைப்லைன் போடப்படாத காரணத்தால், உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வழிந்தோடியது.
இருப்பினும் நகராட்சி ஊழியர்கள் வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால், அப்பகுதி மக்களே குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி முழுவதும் தண்ணீர் வழிந்தோடியதால், பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தொடர்ந்து, அப்பகுதி மக்களே தண்ணீரை அகற்றி, பைப்லைன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.