/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பசுந்தாள் பயிர் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல் பசுந்தாள் பயிர் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
பசுந்தாள் பயிர் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
பசுந்தாள் பயிர் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
பசுந்தாள் பயிர் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
ADDED : ஜூன் 22, 2024 04:31 AM

நெல்லிக்குப்பம்,: அண்ணாகிராமம் வட்டாரத்தில் முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் பயிர் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை விவசாயிகளுக்கு விதைகளை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார்.
அண்ணாகிராமம் வட்டார அலுவலகத்தில் 9 ஆயிரத்து 400 கிலோ தக்ககைபூண்டு விதை இருப்பில் உள்ளது. மண் வளத்தை அதிகரிக்க விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் விதைத்து 40 நாட்களில் மடக்கி உழவு செய்வதன் மூலம் மண்ணில் அங்கக சத்து அதிகரித்து மண் வளம் பெருகும். களர், உவர் நிலங்களை சரி செய்ய முடியும் என, இணை இயக்குனர் ஏழுமலை கூறினார்.
உதவி இயக்குனர் சுரேஷ், அலுவலர் விஜய், உதவி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், கோபாலகிருஷ்ணன், பாரதி, விவசாயிகள் ராமானுஜம், திருவேங்கடம் உட்பட பலர் பங்கேற்றனர்.