ADDED : ஜூன் 22, 2024 04:24 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் காந்தி வீதியில் வேணுகோபால சுவாமி கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது.
இக்கோவில் திருப்பணிக்கு அறநிலையத்துறை 15 லட்சம் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது. பாலாலய பூஜை செய்வதற்குள் டெண்டர் எடுத்தவர் திருப்பணிக்கான பொருட்களை இறக்கினார். அவரிடம், பாலாலயம் செய்யாமல் எப்படி திருப்பணி துவக்கலாம் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இச்செய்தி, தினமலர் நாளிதழில் வெளியானது. அதையடுத்து ஜூலை 1ம் தேதி பாலாலயம் செய்ய அறநிலையத்துறை அனுமதி அளித்தது.