/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சுமைதாங்கி - வெண்கரும்பூர் சாலை பணி கிடப்பில்: பொதுமக்கள் அவதி சுமைதாங்கி - வெண்கரும்பூர் சாலை பணி கிடப்பில்: பொதுமக்கள் அவதி
சுமைதாங்கி - வெண்கரும்பூர் சாலை பணி கிடப்பில்: பொதுமக்கள் அவதி
சுமைதாங்கி - வெண்கரும்பூர் சாலை பணி கிடப்பில்: பொதுமக்கள் அவதி
சுமைதாங்கி - வெண்கரும்பூர் சாலை பணி கிடப்பில்: பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 18, 2024 11:22 PM
பெண்ணாடம்: சுமைதாங்கி - வெண்கரும்பூர் தார்சாலை பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொது மக்கள், வாகன ஓட்டி கள் அவதியடைகின்றனர்.
பெண்ணாடம், சுமைதாங்கி பஸ் நிறுத்தத்தில் இருந்து அரியராவி, ஓ.கீரனுார், பெ.பூவனுார் வழியாக வெண்கரும்பூர் செல்லும் சாலையை பயன்படுத்தி பஸ், லாரி, பள்ளி, கல்லுாரி வாகனங்கள் தினசரி செல்கின்றன.
மேலும், இப்பகுதி கிராம மக்களும் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர். பராமரிப்பின்றி உள்ள இச்சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதியடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, கடந்த 4 மாதங்களுக்கு முன் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. ஆனால் சாலை பணி இதுவரை துவங்க வில்லை. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைவது மட்டும் தொடர்கிறது.
எனவே, சுமைதாங்கி - வெண்கரும்பூர் சாலை பணியை விரைந்து துவக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.