/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சக்கரமங்கலம் ஸ்ரீஅங்காளம்மன் தொழில் வளர்ச்சி பெற.. அம்மனை தரிசிக்கலாம் சக்கரமங்கலம் ஸ்ரீஅங்காளம்மன் தொழில் வளர்ச்சி பெற.. அம்மனை தரிசிக்கலாம்
சக்கரமங்கலம் ஸ்ரீஅங்காளம்மன் தொழில் வளர்ச்சி பெற.. அம்மனை தரிசிக்கலாம்
சக்கரமங்கலம் ஸ்ரீஅங்காளம்மன் தொழில் வளர்ச்சி பெற.. அம்மனை தரிசிக்கலாம்
சக்கரமங்கலம் ஸ்ரீஅங்காளம்மன் தொழில் வளர்ச்சி பெற.. அம்மனை தரிசிக்கலாம்
ADDED : ஜூலை 18, 2024 11:23 PM

செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறதா.. கவலை வேண்டாம். விருத்தாசலம் அருகே உள்ள சக்கரமங்கலம் ஸ்ரீஅங்காளம்மன் கோவிலுக்கு செல்லுங்கள்.. 48 நாட்களுக்குள் தொழிலில் வளர்ச்சி உண்டாகி பெருத்த லாபம் கிடைக்கும் என்கின்றனர்.
விருத்தாசலம் அடுத்துள்ள கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து 4 கி.மீட்டரில் வல்லியம் கிராமம் அருகே சக்கரமங்கலத்தில் ஸ்ரீஅங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வமாகும். இக்கோவிலில் விநாயகர், பாவாடைராயர் , சக்கரத்தாழ்வார் என பல தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து நாள்தோறும் பூஜைகள் நடக்கிறது.
செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படுபவர்கள் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்தால், 48 நாட்களுக்குள் தொழிலில் வளர்ச்சி ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள் மற்றும் குடும்ப பிரச்னை உள்ளவர்கள் அம்மனை தரிசனம் செய்வதால், குழந்தை செல்வம் மட்டுமின்றி நிம்மதியும் பொருட் செல்வமும் பெருகும் என்கின்றனர்.
இக்கோவில் குறித்து மேலும் விபரங்கள் அறிய 97514 73665 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.