Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வகுப்பறைகளில் இடவசதியின்றி மாற்றுத்திறன் மாணவர்கள் அவதி

வகுப்பறைகளில் இடவசதியின்றி மாற்றுத்திறன் மாணவர்கள் அவதி

வகுப்பறைகளில் இடவசதியின்றி மாற்றுத்திறன் மாணவர்கள் அவதி

வகுப்பறைகளில் இடவசதியின்றி மாற்றுத்திறன் மாணவர்கள் அவதி

ADDED : ஜூன் 30, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம், : விருத்தாசலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வகுப்பறையில் பழைய பொருட்களை குவித்து வைத்திருப்பதால் மாணவர்கள் அமர இடமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விருத்தாசலம், தென்கோட்டைவீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பிசியோதெரபி, உடற்பயிற்சி மற்றும் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு வரை 40 மாணவர்கள் படித்தனர். தற்போது, 30 மாற்றுத்திறன் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு ஒரு அறையில் உடற்பயிற்சியும், மற்றொரு அறையில் வகுப்புகளும் நடத்தப்பட்டு வந்தது. நடப்பு கல்வியாண்டில் ஒரு அறை மூடப்பட்ட நிலையில், மற்றொரு அறையில் பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்களை குவித்து வைத்து விட்டனர். இதனால் இடநெருக்கடியில் மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி பயிலும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அவர்களின் உடல் ஊனத்தை உடற்பயிற்சி மூலம் சரிசெய்யும் வகையில் 4 லட்சம் ரூபாயில் உபகரணங்கள் இருந்தும் அவற்றை பயன்படுத்த இடவசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, தென்கோட்டைவீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வகுப்பறையை அவர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றித்தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us