/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காமராஜர் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம் காமராஜர் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
காமராஜர் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
காமராஜர் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
காமராஜர் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
ADDED : ஜூன் 30, 2024 06:16 AM

புவனகிரி : கீரப்பாளையம் காமராஜர் மருந்தாக்கியல் கல்லுாரியில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, உறுதிமொழியேற்பு மற்றும் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதன்மைச் செயல் அலுவலர் தமிழரசு சம்பந்தம் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் கீதா வரவேற்றார். மேலாளர் கேசவன் முன்னிலை வகித்தார்.
சிதம்பரம் காமராஜர் மருத்துவமனை ஆராய்ச்சி அலுவலர் ஹைனா பிரடோஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் காமராஜர் செவிலியர் கல்லுாரி முதல்வர் சுதந்திரா தேவி, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் விமலன் உட்பட பலர் கருத்துரை வழங்கினர்.
கோமதி நன்றி கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக போதைப்பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழியினை மாணவர்கள் ஏற்றனர்.