விருதையில் மாநில கைப்பந்து போட்டி
விருதையில் மாநில கைப்பந்து போட்டி
விருதையில் மாநில கைப்பந்து போட்டி
ADDED : ஜூலை 03, 2024 05:42 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் பெரியார் நகர் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் சேலஞ்சர்ஸ் கைப்பந்து கழகம் சார்பில், 6ம் ஆண்டு அழகப்பா நினைவு சுழற் கோப்பை கைப்பந்து போட்டி, மூன்று நாட்கள் நடந்தது.
இந்த போட்டியில், ஆண்கள் பிரிவில், சென்னையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, எஸ்.ஆர்.எம்., பல்கலை., ஜி.எஸ்.டி., ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன.
அதேபோல், பெண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை., ; எஸ்.டி.ஏ.டி., ; ஐ.சி.எப்., ; ஜே.பி.ஆர்., அணிகள் பங்கேற்றன.
இறுதியில், ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலை., பெண்கள் பிரிவில் ஜே.பி.ஆர்., அணிகள் முதலிடம் பிடித்தன. ஆண்கள் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலை., அணிகள் இரண்டாமிடம் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி,க்கள் விருத்தாசலம், ஆரோக்கியராஜ், திட்டக்குடி மோகன் ஆகியோர் பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கினர்.
இதில், சேலஞ்சர் கைப்பந்து கழக தலைவர் சலீம், செயலாளர் மோகன், பொருளாளர் அருண், மேனக் ஷா, மாவட்ட கைப்பந்து சங்க செயலர் சண்முகம், என்.எஸ்.சி., கைப்பந்து வீரர் ராஜன்பாபு, ஆசிரியர் கோவிந்தராஜ், விஜயகுமார், அமிருதீன், சந்துரு, டாக்டர் வள்ளுவன், மணிவண்ணன், தமிழ்வாணன், வெற்றிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.