ADDED : ஜூலை 18, 2024 11:15 AM
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அருள்தரும் அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்பனுக்கு பால், தயிர்,சந்தனம் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குருசாமிகள் ராதா, வைத்தியநாதன், பழனி, கமலக்கண்ணன், கல்யாணசுந்தரம், சாமிபிள்ளை ஏற்பாடுகளை செய்தனர்.