ADDED : ஜூலை 12, 2024 05:57 AM

புவனகிரி: புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (மேற்கு) இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவ, மாணவியர்களைக் கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். ஆசிரியை மேரிவிமலி வரவேற்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேல்சாமி, பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் கவிதா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கலெக்டர் உத்தரவின் பேரில் அனைத்து மாணவர்களும் இடை நிற்றல் இல்லாமல் கல்வி கற்க வேண்டும். இடை நிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டம், குழந்தை திருமணம், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான காரணம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடக்கக்கல்வி மாணவர்கள் எளிய முறையில் கற்பதற்கான கல்வி உபகரணங்கள் வழங்கினர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.