ADDED : ஜூன் 24, 2024 04:36 AM
விருத்தாசலம், ; விருத்தாசலம் அருகே காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி, தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கம்மாபுரம் அடுத்த சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் மகன் வேலன், 19; சேலம் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடுதிரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை வீரபாண்டியன் புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.