/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரேஷன் அரிசி கடத்தல்; சிதம்பரம் அருகே 3 பேர் கைது ரேஷன் அரிசி கடத்தல்; சிதம்பரம் அருகே 3 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்தல்; சிதம்பரம் அருகே 3 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்தல்; சிதம்பரம் அருகே 3 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்தல்; சிதம்பரம் அருகே 3 பேர் கைது
ADDED : ஜூன் 19, 2024 01:26 AM

கடலுார் : சிதம்பரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் சிதம்பரம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கடலுார் - சிதம்பரம் சாலையில் அத்தியாநல்லுார் கிராமம் அருகே வந்த மினி டெம்போவை நிறுத்தினர். உடன் டெம்போவில் இருந்து தப்பியோடிய மூவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் வேலுார் மாவட்டம், காட்பாடி நாகராஜன் மகன் பூவரசன், 26; பாபு, 40; ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம் சிவக்குமார், 32; என்பதும், இவர்கள் புதுச்சத்திரம், அத்தியா நல்லுார், முட்லுார் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வாத்து தீவனத்திற்காக 50 கிலோ வீதம் 22 சாக்குகளில் 1,100 கிலோ அரிசியை வேலுாருக்கு கடத்தியது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்தி வந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினிடெம்போவையும் பறிமுதல் செய்தனர்.