/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில் படிக்கட்டில் பயணித்த பீகார் வாலிபர் தவறி விழுந்து பலி ரயில் படிக்கட்டில் பயணித்த பீகார் வாலிபர் தவறி விழுந்து பலி
ரயில் படிக்கட்டில் பயணித்த பீகார் வாலிபர் தவறி விழுந்து பலி
ரயில் படிக்கட்டில் பயணித்த பீகார் வாலிபர் தவறி விழுந்து பலி
ரயில் படிக்கட்டில் பயணித்த பீகார் வாலிபர் தவறி விழுந்து பலி
ADDED : ஜூன் 19, 2024 01:25 AM
பண்ருட்டி : பீகார் மாநிலம், பூரணியா பேங்க்மேன்கி பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் அஜித்குமார்ஷா, 19; இவர், நாகப்பட்டினத்தில் சாலை போடும் பணியை முடித்துவிட்டு பீகார் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து சென்னைக்கு ரயிலில் பொது பயணிகள் பெட்டியில், பயணித்தார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் அமர்ந்திருந்தார்.
ரயில் நேற்று அதிகாலை பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, படிக்கட்டில் அமர்ந்திருந்த அஜித்குமார்ஷா துாக்க கலக்கத்தில் கீழே விழுந்து இறந்தார்.
கடலுார் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புருேஷாத்தம்மன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.