/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தெருவிளக்கு இல்லாமல் எஸ்.எல்., நகர் மக்கள் அவதி தெருவிளக்கு இல்லாமல் எஸ்.எல்., நகர் மக்கள் அவதி
தெருவிளக்கு இல்லாமல் எஸ்.எல்., நகர் மக்கள் அவதி
தெருவிளக்கு இல்லாமல் எஸ்.எல்., நகர் மக்கள் அவதி
தெருவிளக்கு இல்லாமல் எஸ்.எல்., நகர் மக்கள் அவதி
ADDED : ஜூலை 14, 2024 11:19 PM
நெல்லிக்குப்பம்: நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தெருவிளக்குகள் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றவர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி எஸ்.எல்.,நகரில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இந்த மனைபிரிவு அரசு அங்கீகாரம் பெற்றதாகும்.எனவே தெருவிளக்குள்,சாலை,கழிவுநீர் கால்வாய் போன்றவை அமைக்க நகராட்சிக்கு உரிய பணம் செலுத்தியுள்ளனர்.ஆனால் அங்கு சாலை வசதி மட்டும் செய்யப்பட்டது.
பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் இருந்தும் ஒரு தெருவில் கூட தெருவிளக்கு வசதி செய்யவில்லை.இதுபற்றி கவுன்சிலர் ஸ்ரீதர் பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் இரவில் இருட்டாக இருப்பதால் சமூகவிரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன.உடனடியாக தெருவிளக்குகள் போடாவிட்டால் நகராட்சிக்கு வரி செலுத்துவதில்லை என மக்கள் முடிவு செய்துள்ளனர். அதிகாரிகள் வெளியூரில் இருந்து வருவதால் மக்கள் சிரமத்தை உணராமல் அலட்சியமாக உள்ளனர்.மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளது வேதனையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.