/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மழையால் எள் பயிரிட்ட விவசாயிகள் பாதிப்பு மழையால் எள் பயிரிட்ட விவசாயிகள் பாதிப்பு
மழையால் எள் பயிரிட்ட விவசாயிகள் பாதிப்பு
மழையால் எள் பயிரிட்ட விவசாயிகள் பாதிப்பு
மழையால் எள் பயிரிட்ட விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 20, 2024 03:50 AM

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி பகுதியில், திடீர் மழையால் எள் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குள்ளஞ்சாவடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கோடை காலம் தொடங்கியதும் விவசாயிகள் பலர் எள் பயிரிட்டனர். அறுவடைக்கு பிறகு அரசு கமிட்டிகளில் நல்ல விலைக்கு எள் கொள்முதல் செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வேலை செய்து வந்தனர். கடந்த ஒரு மாதமாகவே அவ்வப்போது திடீர் கோடை மழை பெய்வதால், எள் பயிரிட்ட விவசாயிகள் கலக்கமடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதிகளில் அறுவடை முடிந்த எள் குவியலில் தண்ணீர் தேங்கி சேதமடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நனைந்த எள் பயிர்களை உலர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.