/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முன்னாள் மாணவர்கள் ஊக்கத்தொகை வழங்கல் முன்னாள் மாணவர்கள் ஊக்கத்தொகை வழங்கல்
முன்னாள் மாணவர்கள் ஊக்கத்தொகை வழங்கல்
முன்னாள் மாணவர்கள் ஊக்கத்தொகை வழங்கல்
முன்னாள் மாணவர்கள் ஊக்கத்தொகை வழங்கல்
ADDED : ஜூன் 20, 2024 03:51 AM

கடலுார் : கடலுார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்க தொகை மற்றும் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ரவி வரவேற்றார். பள்ளி முன்னாள் வேதியியல் ஆசிரியர் கோவிந்தராஜன், ஆசிரியர் கோவிந்தராஜன், மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மாரிச்செல்வன் மணி மற்றும் கோபிநாத் ராமதாஸ் ஆகியோர் ஏற்பாட்டில், பிளஸ் 2வில் முதலிடம் பிடித்த திருமலைவாசனுக்கு 10,000 ரூபாய், இரண்டாமிடம் மாணவர் அகரமுதல்வனுக்கு 5,000 ரூபாய், மூன்றாமிடம் மாணவர் நிரஞ்சனுக்கு 3,000 ரூபாய் மற்றும் பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர் ஆகாஷிற்கு 5,000 ரூபாய், இரண்டாமிடம் மாணவர் யோகண்டேஸ்வரனுக்கு 3,000 ரூபாய், மூன்றாமிடம் மாணவர் சிவபிரகாசிற்கு 2,000 ரூபாயை அபிராமசுந்தரி மாரிச்செல்வன் வழங்கினார்.
மேலும், 10 ஏழை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
மேலும் முன்னாள் மாணவர்கள் மாரிச்செல்வன் மணி, கோபிநாத் ராமதாஸ் ஆகியோரின் பெற்றோர் கலந்து கொண்டு, பள்ளியில் பழுதாகி இருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்கியும், 2 குப்பை தொட்டிகளை மாணவர்களுக்கு வழங்கினர்.
உதவி தலைமை ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.