/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 25, 2024 11:38 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை செல்வகுமாரி தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், டி.இ.ஓ., துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார் துவக்கி வைத்தார்.
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் துவங்கிய பேரணி சன்னதி வீதி, கடைவீதி, பெண்ணாடம் சாலை வழியாக வந்து, விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது.
இதில் கலந்துகொண்ட மாணவிகள் பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூகப் பிரச்சினைகளை தடுப்போம். என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசங்கங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் நலக்குழுவினர், போலீசார் மற்றும் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.