/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 25, 2024 11:37 PM

நெல்லிக்குப்பம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், நெல்லிக்குப்பம் பாரதியார் தெருவில் கால்வாய் கட்ட இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு இடித்து அகற்றப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பாரதியார் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. அதற்காக, அப்பகுதியில் வீடுகளையொட்டி 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி நடந்தது.
அப்போது, அப்குதியில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் அவரது வீட்டின் படிகட்டுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பணியை கிடப்பில் போட்டனர். அந்த தெருவில் அனைவரின் வீடுகளின் முன்பும் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், பணி நடக்காததால், 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் அவசரத்துக்கு வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதைதொடர்ந்து நேற்று கமிஷனர் கிருஷ்ணராஜன் முன்னிலையில் கால்வாய் கட்ட இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு இடித்து அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.