ADDED : ஜூன் 20, 2024 04:18 AM

பண்ருட்டி : பண்ருட்டி ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம், மன வளக்கலை மன்றம் , சேமக்கோட்டை ஊராட்சி இணைந்து திருமூலநாதர் கோவில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
ராஜசேகர் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மணிவண்ணன், நுகர்வோர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியன், முன்னாள் துணைசேர்மன் விஜயரங்கன், மனவளக்கலை மன்ற தலைவர் அபிராமி விஜயரங்கன் முன்னிலை வகித்தனர்.
கோவில் வளாகத்தில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் 701 மரக்கன்றுகள், 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் 9 ராசிக்கான மரங்கள் நடப்பட்டது. பி.டி.ஒ., சங்கர், சக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.