ADDED : ஜூன் 20, 2024 04:18 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கலிஞ்சிக்குப்பம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த தோஸ்த் சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில், பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து திருக்கண்டேஸ்வரம் தோப்பு தெருவை சேர்ந்த சிவப்பிரகாசத்தை, 46; கைது செய்தனர்.
மணல் கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.