ADDED : ஜூலை 28, 2024 04:43 AM
நடுவீரப்பட்டு, நடுவீரப்பட்டு அருகே மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு போலீசார் நரிமேடு கெடிலம் ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கெடிலம் ஆற்றில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் கீழ்மாம்பட்டு வேல்முருகன்,45; மணல் கடத்தி வந்தார்.
நடுவீரப்பட்டு போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து ,வேல்முருகனை கைது செய்தனர்.